பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நெய்வேலி அருகே கொடூரம்..!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நெய்வேலி அருகே கொடூரம்..!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நெய்வேலி அருகே கொடூரம்..!
Published on

நெய்வேலி அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் நேற்று முன்தினம் இரவு வடலூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சுரேந்தர் உடன் திரும்பியுள்ளார். அப்போது, நெய்வேலி சாம்பல் ஏரி அருகே இவர்கள் சென்றபோது, அங்கே பிரகாஷ், கார்த்தி, சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

(கொலை செய்யப்பட்டுள்ள பிரகாஷ்)

அப்போது அவ்வழியே வந்த பெண்மணியை தடுத்து நிறுத்திய இந்த கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பெண் உடன் வந்த சுரேந்தரை அவர்கள் அடித்து துரத்திவிட்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தபோது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் என்ற இளைஞரை நண்பர்கள்  சேர்ந்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

(கைதான கார்த்தி, சுதீஷ், ராஜதுரை, சிவபாலன்)

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் விசாரணை செய்ததில் பிரகாஷ் இறந்ததும், கார்த்தி, சதீஷ், ராஜதுரை, சிவபாலன் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com