\
காஞ்சிபுரத்தில் சோகம்: நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் சோகம்: நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் சோகம்: நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பேர் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது 16 வயதான சிறுமி கலை என்பவர் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது கலையை காப்பாற்றுவதற்காக சித்ரா(35) திலகா(40) பூர்ணிமா(12) சூரியா(13) ஆகிய மற்ற நான்கு பேரும் ஏரிக்குள் இறங்கியுள்ளனர். நீரில் சிக்கிய அந்த 5 பேரும் ஏரியில் தத்தளித்து உள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தினால் திலகாவைத் தவிர மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

இதையடுத்து உயிர்பிழைத்த திலகா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்ட அப்பகுதி மக்கள், சம்பவம் தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com