\
பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு

பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு

பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு
Published on

விழுப்புரம் அருகே பூட்டிய வீட்டிற்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தில் வசித்து வந்த சுந்தரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் அவர்களது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. 

உடனே உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com