\
கருணாநிதி குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குப்பதிவு

கருணாநிதி குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குப்பதிவு

கருணாநிதி குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குப்பதிவு
Published on
யூட்யூபர் சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததாக கூறப்படும் வினோத் என்பவரை, யூட்யூபரான திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், அவரது கடைக்கே சென்று மிரட்டியுள்ளார். இது குறித்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் அவமதித்தல், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com