பேருந்து மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
தனியார் பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுமி படுகாயமடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜமன்னார்குடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், சிங்கப்பூரில் இருந்து வந்த பத்மாவதி, ராஜமன்னார்குடியைச் சேர்ந்த வேல்முருகன், மணிகண்டன் மற்றும் சிறுமி த்ரிஷா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் டயர் வெடித்தது.
இதில் நிலை தடுமாறிய கார், தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி, வேல்முருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். படுகாயமடைந்த சிறுமி த்ரிஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி றார். இந்த விபத்து குறித்து போலீசார வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.