மருத்துவ கவுன்சிலிங்: கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா

மருத்துவ கவுன்சிலிங்: கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா

மருத்துவ கவுன்சிலிங்: கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா
Published on

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான இரண்டாம் நாள் கலந்தாய்வு நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல்நாள் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. தமிழக அரசின் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த 972 பேரில், 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த வகையில் 405 பேருக்கு நேரடியாக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதன்படி, தமிழக அரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 270 மாணாக்கர்களில், 262 பேர் நேற்று பங்கேற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் நேற்றே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அதில் 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com