\
பேருந்து நிறுத்தத்தின் கூரை இடிந்த விபத்து: இறந்தவர்களுக்கு 4 லட்சம் நிதியுதவி!

பேருந்து நிறுத்தத்தின் கூரை இடிந்த விபத்து: இறந்தவர்களுக்கு 4 லட்சம் நிதியுதவி!

பேருந்து நிறுத்தத்தின் கூரை இடிந்த விபத்து: இறந்தவர்களுக்கு 4 லட்சம் நிதியுதவி!
Published on

கோவை சோமனூரில் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்‌ளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி , மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் அதிக காயம் ‌அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ‌வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com