\
பைக் மீது லாரி கவிழ்ந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு

பைக் மீது லாரி கவிழ்ந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு

பைக் மீது லாரி கவிழ்ந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு
Published on

தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி, இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுாி மாவட்டம் சிவாடியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்புறம் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையின் தடுப்பு கம்பியின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம்(30) வாழப்பாடியை சேர்ந்த கிளீனர் தங்கராஜ் (55) ஆகியோரும் இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் பூரிகல்லைச் சேர்ந்த வாட்ச்மேனாக பணிபுரியும் சின்னவன்(55) அரியா கவுண்டர்(53) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com