திருச்சி பரப்புரையில் விஜய்
திருச்சி பரப்புரையில் விஜய்எக்ஸ்

"கேட்கவில்லை.. கேட்கவில்லை" - கூச்சலிட்ட தொண்டர்கள்.. என்ன நடந்தது திருச்சியில்?

தவெக தொண்டர்களின் கூட்ட நெரிசலால் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு, திருச்சியில் உரையாற்றினார் தவெக தலைவர் விஜய்.
Published on
Summary

க்தவெக தலைவர் விஜய்க்கு திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரை மேற்கொள்ள 10.30 மணி முதல் 11.00 வரை காவல்துறை அனுமதியளித்திருந்து. ஆனால், தவெக தொண்டர்களின் கூட்டத்தால் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் இடத்திற்கு விஜய் வந்து சேர்வதில், தொடர்ந்து தாமதமாகி வந்தது. 4 மணி நேரம் தாமதத்திற்கு பிறகே தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதில், விஜய் விரைவில் மாவட்டம் முழுதும் தேர்தல் பரப்புரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு, உங்க விஜய்... நா வாரேன்...’ என்ற பெயரில் விஜய் மேற்கொள்ளும் பரப்புரைக்கான இலச்சினையை தவெக தலைமை வெளியிட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக கூறி விஜய் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் அட்டவணையை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டிருந்தார். அதன்படி, திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்PT News

ஆனாலும், தவெகவின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை அனுமதியளிக்காமலேயே இருந்து வந்தது. இதனை தொடர்ந்து என்.ஆனந்த் தவெக பரப்புரைக்கு அனுமதியளிக்கக் கூறி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். பின்னர் 23 நிபந்தனைகளுடன் தவெக விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 13) திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். பின்னர், அங்கிருந்து தவெக பரப்புரை வாகனத்தின் மூலம் பரப்புரை நடக்கும் மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார். இந்த நிலையில் விஜயை வரவேற்க தவெக தொண்டர்கள் சாலை முழுதும் இருபுறமும் கூடியிருந்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

திருச்சி விமானநிலையத்திற்கும் மரக்கடைப் பகுதிக்கும் இடையே இருந்த 8 கிலோ மீட்டர் தூரத்தை தடுக்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இதானால் 10.30 மணி முதல் 11.00 வரை அனுமதி வழங்கியிருந்த பரப்புரை நடக்கும் இடத்திற்கு தவெக தலைவர் விஜய் 2.30 மணிக்குதான் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பரப்புரை கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் 15க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், 4 மணிநேர தாமதத்திற்கு பிறகு வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய் மக்களிடம் உரையாற்றினார். அதில், வீரர்கள் போருக்குப் செல்வதற்கு முன் முதலில் குலதெய்வம் கோவிலுக்கு செல்வார்கள். பின்னர்தான் போருக்கு செல்வார்கள், அதே போலவே நானும் அடுத்த வருடம் ஜனநாயகப் போருக்கு போவதற்கு முன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

திருச்சி பரப்புரையில் விஜய்
நேபாளம் | இடைக்கால பிரதமர் பதவியேற்பு.. மோடி வாழ்த்து.. யார் இந்த சுஷிலா கார்க்கி?

திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்தும் மண். அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும் இந்த மண்ணில் தான், எம்ஜிஆர் தனது முதல் மாநாட்டை நடத்தியதும் இந்த மண்ணில்தான் என்று பேசினார். தொடர்ந்து, திமுகவின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, அவர்கள் பாணியிலேயே, சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திருச்சி பரப்புரையில் விஜய்
திருச்சி பரப்புரையில் விஜய்எக்ஸ்

மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை எனவும், பெண்களுக்கு இலவச பேருந்தை விட்டு, ஓசி ஓசி என சொல்லிக் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் விஜய் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை ரத்து செய்வோம்... கல்விக் கடனை ரத்து செய்வோம் என சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுகவின் பல்வேறு வாக்குறுதிகளை குறிப்பிட்டு விஜய் கேள்வி எழுப்பினார். நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே தாங்கள் செய்வோம் என வாக்குறுதி அளித்த விஜய், பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கா உங்கள் ஓட்டு? என மக்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் ”இல்லை இல்லை” என கூச்சலிட்டனர்.

திருச்சி பரப்புரையில் விஜய்
பெரம்பலூர்|விஜயகாந்த் உரையாற்றிய இடத்தில் விஜய்., தொடர்கிறதா சென்டிமென்ட்?

தொடர்ந்து, பரப்புரைக் கூட்டத்தில் தொழில்நுட்ப கோளாறால் மைக் வேலை செய்யவில்லை. இதனால் விஜயின் பேச்சை கேட்க முடியாமல் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விஜய் பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே, மைக் வேலை செய்யாமல் போனது. பழுதை சரி செய்ய முயன்றபோதும், விஜய் பேசியது தொண்டர்களுக்கு சரிவர கேட்கவில்லை. அருகில் இருந்த சிலருக்கு மட்டுமே விஜயின் பேச்சை கேட்க முடிந்தது. இதனால், தொண்டர்கள் கேட்கவில்லை.. கேட்கவில்லை... குரல் எழுப்பினர். தனது உரை முடிந்ததும் இன்று இரண்டாம் கட்டமாக பேசவிருக்கும் அரியலூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

திருச்சி பரப்புரையில் விஜய்
இந்தியாவுக்கு 50% வரி.. அமெரிக்காவுடன் விரிசலடைந்த உறவு.. ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com