பவானி ஆற்றில் மூழ்கிய 3 பெண்களின் சடலங்கள் மீட்பு: சிறுமியை தேடுகிறது தீயணைப்பு துறை

பவானி ஆற்றில் மூழ்கிய 3 பெண்களின் சடலங்கள் மீட்பு: சிறுமியை தேடுகிறது தீயணைப்பு துறை

பவானி ஆற்றில் மூழ்கிய 3 பெண்களின் சடலங்கள் மீட்பு: சிறுமியை தேடுகிறது தீயணைப்பு துறை
Published on

சத்தியமங்கலம் பவானி ஆற்றில் மூழ்கிய 4 பெண்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பர்வீன், அவரது மகள் ரகுமத் திஷா, உறவினர்கள் பத்ரு நிஷா, சிறுமி பிரதிஷா ஆகியோர் சத்தியமங்கலம் தபால் நிலைய வீதியில் உள்ள இதயத்துல்லா என்பவரின் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தனர். இவர்கள் 4 பேரும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்தனர். அப்போது ரகுமத் திஷா ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற 3 பேரும் ஒன்றன் பின் ஒன்றாக சென்றனர். இதில் அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி ரகுமத் திஷா, பத்ரு நிஷா உள்ளிட்ட 3 பேரின் உடல்களை மீட்டனர். பள்ளி மாணவியின் உடலைத் தேடும் பணி இன்று காலை தொடர்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com