\
திண்டிவனம்: மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

திண்டிவனம்: மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

திண்டிவனம்: மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Published on

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் தளவாய்பட்டி அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குருநாதன்(45). இவர் தனது குடும்பத்துடன் சென்னை மேடவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், குருநாதன் நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு தனது மனைவி இந்துமதி (40) மகன் முகிலன் (16) மற்றும் சகோதரன் செந்தில்நாதன் (47) ஆகியோருடன் சென்றுவிட்டு காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே குருநாதன், இந்துமதி, முகிலன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் செந்தில்நாதன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பிரேதங்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com