டெங்கு குணமடைந்த பின்பும் 4 நாட்கள் கண்காணிப்பு: ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சல் குணமடைந்தவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சில நாள்கள் ஓய்வு எடுப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பொது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்ததையும், அதில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்ட ராதாகிருஷ்ணனும், குழந்தைசாமியும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும்படி அறிவுரை வழங்கினர்.