\
3-வது நாளாக தொடரும் மாணவர் போராட்டம்: கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

3-வது நாளாக தொடரும் மாணவர் போராட்டம்: கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

3-வது நாளாக தொடரும் மாணவர் போராட்டம்: கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
Published on: 

அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்ட நீட் தேர்வை இனி தமிழகத்தில் நடத்தக் கூடாது என மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

நேற்று முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 61 மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com