சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?
தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6006 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 3043 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம். செங்கல்பட்டு - 26, கடலூர் - 34, தருமபுரி - 2, காஞ்சிபுரம் - 8, கன்னியாகுமரி - 8, கிருஷ்ணகிரி - 2, மதுரை - 2, ராமநாதபுரம் - 1, தென்காசி - 1, தேனி - 1, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 75, திருவண்ணாமலை - 11, நெல்லை - 4, திருச்சி - 1, விழுப்புரம் - 21, விருதுநகர் - 3 என கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.