ஒரு பக்கம் சிறுநீரக கோளாறு.. மறுபக்கம் கொரோனா - 39 வயது பெண் உயிரிழப்பு

ஒரு பக்கம் சிறுநீரக கோளாறு.. மறுபக்கம் கொரோனா - 39 வயது பெண் உயிரிழப்பு

ஒரு பக்கம் சிறுநீரக கோளாறு.. மறுபக்கம் கொரோனா - 39 வயது பெண் உயிரிழப்பு
Published on

சிறுநீரக நோய் இருந்த 39 வயது பெண் சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 804 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் நீண்ட நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெண் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். 39 வயதுள்ள அப்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 29ஆம் தேதி கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 30ஆம் தேதி காலை 11.26 மணிக்கு அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி 12 மணிக்கே இறந்துபோனார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com