\
38.1 PC in Chennai Poonamallee Face High-Risk Pregnancies
model imagex page

சென்னை |பூந்தமல்லியில் 38.1% பேருக்கு ஆபத்தான கர்ப்பம்.. ஆய்வில் தகவல்!

கர்ப்பகாலத்தில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
Published on

சென்னை பூந்தமல்லி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின்படி,புறநகர்ப் பகுதிகளில் பதிவு செய்த கர்ப்பிணிகளில் 38.1 சதவீதம் பேருக்கு கர்ப்பமானது அதிக ஆபத்துள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின்படி,புறநகர்ப் பகுதிகளில் பதிவு செய்த கர்ப்பிணிகளில் 38.1 சதவீதம் பேருக்கு கர்ப்பமானது அதிக ஆபத்துள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற ஆவடி மாநகராட்சிப் பகுதியில் இந்த அளவு 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிக ஆபத்து ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக தைராய்டு குறைபாடு 26.1 சதவீதமும், முந்தைய பிரசவத்தில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பது 18.4 சதவீதமும், கர்ப்பகால நீரிழிவு நோய் 10.2 சதவீதமும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், 32.2 சதவீதம் பெண்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புகள் ஒரேநேரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய அதிக ஆபத்துள்ள பிரசவங்களில் அறுவைச்சிகிச்சை செய்யப்படும் வீதம் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தமிழகத்தின் சராசரியான 36.3 சதவீதத்தைவிட மிக அதிகம்.இருப்பினும், தமிழகத்தின் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 35 ஆகக் குறைந்து, இந்தியாவில் இரண்டாவது மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், கர்ப்பகாலத்தில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com