கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா!

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா!

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா!
Published on

சென்னை கோயம்பேடு சந்தையில், மொத்தம் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 கோயம்பேடு சந்தையில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், சந்தையோடு  தொடர்புடையோருக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாக, பழ வியாபாரி ஒருவர், மலர் வியாபாரிகளான தந்தை - மகன் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீண்டது. அவர்களை தொடர்ந்து சந்தையில் கூலி வேலை செய்து வந்த கணவன் மனைவிக்கும் கொரோனா பரவியது.

சந்தையிலிருந்து காய்கறி வாங்கிச்சென்ற ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கும் கொரோனா உறுதியானது.

இந்நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல், 2 மணி நேரத்திற்கும் மேலாக கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com