
தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 38 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 38 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.