சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கொரோனா..! - மற்ற மாவட்டங்களில்..?
4 மாத கர்ப்பிணி உட்பட 15 பேருக்குத் திருவள்ளூரில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
செங்கல்பட்டு - 9, திண்டுக்கல் - 1, காஞ்சிபுரம் - 8, கன்னியாகுமரி - 5, கரூர் - 1, மதுரை - 2, பெரம்பலூர் - 4, ராமநாதபுரம் - 1, தென்காசி - 1, தேனி - 1, திருவள்ளூர் - 15, திருவண்ணாமலை - 8, தூத்துக்குடி - 1, நெல்லை - 3 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7,365 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 66 பேர் பலியாகியுள்ளனர்.