சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னை மெட்ரோ ரயில்கள்முகநூல்

2024 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையை 35.53 கோடி பயணிகள்..!

மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கப்பட்டதிலிருந்து 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை 35.53 கோடி மக்கள் பயணித்துள்ளனர்.
Published on

2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை பச்சை நீளம் என்கிற இரண்டு வழித்தடத்தில் 45 கிலோமீட்டர் நீளத்திற்கு நகரின் 32 பகுதிகளை இணைக்கிறது.

ஜூன் 29, 2015 முதல் சென்னை மெட்ரோ ரயிலின் இயக்கம் தொடங்கிய நிலையில் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35.53 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர், இது 2023-ம் ஆண்டைவிட 1.41 கோடி பயணிகள் அதிகம்.

ஆண்டு தோறும் பயணிகள் எண்ணிக்கை (தொகுப்பு)

2015-2018: 2.80 கோடி பயணிகள்

2019: 3.28 கோடி பயணிகள்

2020: 1.18 கோடி பயணிகள் (குறைந்த அளவிலானது, கொரோனா தொற்று காரணமாக)

2021: 2.53 கோடி பயணிகள்

2022: 6.09 கோடி பயணிகள்

2023: 9.11 கோடி பயணிகள்

2024: 10.52 கோடி பயணிகள்

ஒரு நாளைக்கு சராசரியாக 3.20 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகும் நிலையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் போது அதிகமான பயணிகள் பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் கொரோனா, கட்டுமான பணிகள், நகரில் முக்கிய பகுதிகளை இணைக்காததன் காரணமாக திட்டமிட்டதை விட பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிரந்தரமாக பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்துள்ளது முன்னேற்றத்தை காட்டுவதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com