ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய்... 35 ஆடுகளை கடித்து குதறிய சோகம்!

ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய்... 35 ஆடுகளை கடித்து குதறிய சோகம்!
ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய்... 35 ஆடுகளை கடித்து குதறிய சோகம்!

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஒன்று, ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்துள்ளன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் சொந்தமாக 50 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து, அதில் 50 ஆடுகளையும் பராமரித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஆட்டுக்கொட்டகைக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று, ஆடுகளை கடித்து குதறியது. இதில் கடிபட்டு பலத்த காயமடைந்த 35 ஆடுகள் பலியாகின. இதைத்தொடர்ந்து கிருஷ்ணசாமி வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் அப்பகுதி கால்நடை மருத்துவர் ஆதித்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதனை செய்தார்.

ஒரு ஆடு வளர்ந்து குட்டி ஈன்றுவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். கிருஷ்ணசாமி மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் வளர்த்து வந்த ஆடுகள் இறந்ததால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com