\
தமிழகத்தில் ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி - 422 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி - 422 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி - 422 பேர் உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35,483 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,76,824 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 35,476, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 7 பேர் என 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதிற்குட்பட்ட 1,389 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 5,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 5,559 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,169ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 422 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 240 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 182 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 114 பேர் இணைநோய் இல்லாதவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,468ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்புகளில் சென்னையில் மட்டும் இன்று 81 பேர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com