தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி :  வெளியானது பட்டியல் விவரம்

தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி : வெளியானது பட்டியல் விவரம்

தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி : வெளியானது பட்டியல் விவரம்
Published on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து 34 கடைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் குறிப்பிட்ட தளர்வுகளுடன் அமலில் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 34 கடைகளை மட்டுமே திறக்க அனுமதி எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளைத் திறக்கலாம். செல்போன் விற்கும், பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை, பழுது நீக்கும் கடைகளைத் திறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருசக்கர வாகனம், கார் பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகளைத் திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. டைல்ஸ், பெயிண்ட், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் உதிரிப்பாக விற்பனை கடைகள் இயங்கலாம் எனப்பட்டுள்ளது. மரக்கடைகள், பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகளும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய இடுபொருட்கள், பூச்சி மருந்து விற்பனை கடைகள், பர்னிச்சர் கடைகள் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சலூன்கள், ஸ்பா, அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com