சென்னையில் பாதுகாப்பு வீரர்கள் 34 பேருக்கு கொரோனா

சென்னையில் பாதுகாப்பு வீரர்கள் 34 பேருக்கு கொரோனா

சென்னையில் பாதுகாப்பு வீரர்கள் 34 பேருக்கு கொரோனா
Published on

(கோப்பு புகைப்படம்)

சென்னையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்காவல் படை என மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை நகரில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் நோய் தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 19 காவல்துறையினருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தீயணைப்பு வீரர் உள்பட காவல்துறையை சேர்ந்த மேலும் 8 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. டிஜிபி அலுவலகத்தில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதே போல் திருவல்லிக்கேணியில் 58 வயது நிரம்பிய தீயணைப்பு நிலைய அதிகாரி, சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து தலைமை காவலர், சூளைமேடு காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர், கொத்தவால்சாவடி போக்குவரத்து காவலர் அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், மெரினா காவல் நிலைய காவலர், என இதுவரை மொத்தம் 34 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com