\
திருச்சி பெல் நிறுவன பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்த 31 மான்கள்

திருச்சி பெல் நிறுவன பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்த 31 மான்கள்

திருச்சி பெல் நிறுவன பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்த 31 மான்கள்
Published on

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில் கடந்த இரண்டு தினங்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளன. தகவலறிந்து அங்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் சில மான்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து அருகம்புல், கீரை, காய்கறி ஆகியவற்றை மிளகுடன் சேர்த்து மருந்தாக கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சுபா எனும் புல் வகை தீவனத்தை மான்கள் அதிகமாக உட்கொண்டதால் செரிமானம் ஆகாமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com