புதிய தலைமுறை செய்தி எதிரொலி - கோவாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 300 நபர்கள்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - கோவாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 300 நபர்கள்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - கோவாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 300 நபர்கள்
Published on

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கோவாவில் இருந்து  300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த மாதம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில், கோவாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 300-க்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும், அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் செய்தி வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னெடுப்பில் ஐந்து பேருந்துகளில் 300 பேர் கோவாவிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com