300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில்  கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் 300 சவரன் நகை‌களை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே தலைமை மருத்துவர் மாரிமுத்துவின் வீடு உள்ளது. இவர், பணி காரணமாக சென்னைக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவியும், சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 300சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். 

இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்த மருத்துவர், கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து ஊத்தரங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் விசாரணை மேற்கொண்டார். சிசிடிவி கேமரா இல்லாததே கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com