300 லேப் டெக்னீஷ‌யன்கள் நியம‌னம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

300 லேப் டெக்னீஷ‌யன்கள் நியம‌னம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

300 லேப் டெக்னீஷ‌யன்கள் நியம‌னம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Published on

தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் 300 ஆய்வக ‌பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை அரசு‌ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் ‌வார்டு மற்றும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களின் வார்டுகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கு அமைச்சர் சில ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கால்கோல் நிகழ்ச்சியில்‌ அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய விஜயபாஸ்கர், கடந்த மாதத்தில் ஆயிரத்து 113 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் 350 மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கூடுதலாக 744 சிறப்பு மருத்துவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com