\
கரும்பு ஆலை அதிபர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை

கரும்பு ஆலை அதிபர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை

கரும்பு ஆலை அதிபர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கரும்பு ஆலை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் மானூர் கிராமத்தில் வசிக்கும் கரும்பு ஆலை அதிபர் கணேசன் தீபாவளியை கொண்டாட குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 சவரன் நகை மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com