
மதுரை மாவட்டத்தில் இதுவரை 30 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும், இதுவரை 8.14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர். இதில் 1.71லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால், மாவட்டம் முழுவதும் 30 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நாள்தோறும் 10,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.