ஒரே கிராமத்தில் 30 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அச்சத்தில் பொதுமக்கள்
திருத்தணி அருகே ஒரே கிராமத்தில் 30 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
சரஸ்வதி நகரில் வசிக்கும் 30 பேருக்கு திடீர் வயிற்றுபோக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சுகாராத்துறையினர் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை மக்கள் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடனடியாக அக்கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சுகாதாரப் பணியாளர்கள் வீடு தோறும் குடிநீர் தொட்டிகளில் சோதனையிட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை கோ.அரி எம்.பி, பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.