கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 மாத குழந்தை - 18 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 மாத குழந்தை - 18 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 மாத குழந்தை - 18 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
Published on

சென்னை கோயம்பேடு சந்தையில் கடத்தப்பட்ட 3 மாத குழந்தை மீட்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வரும் தம்பதியின் மூன்று மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டது. கடத்தப்பட்ட குழந்தையின் புகைப்படம் அனைத்து காவல்நிலையத்திற்கும் அனுப்பப்பட்டு விவரம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர். கோயம்பேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை நடைப்பாதை அருகே குழந்தை இருப்பதை கணடறிந்த அங்கு ரோந்து போலீசார், தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தற்போது குழந்தையை மீட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com