கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி!

சத்தியமங்கலம் அருகே கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை ரித்திகா
குழந்தை ரித்திகாPT Desk

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லப்பாண்டி - சத்யா தம்பதியர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். செல்லப்பாண்டி, சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியில் தனது குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

name board
name boardpt desk

இந்நிலையில், நேற்று (செவ்வாய்) சத்யா தங்களின் மூன்று வயது குழந்தை ரித்திகாவை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார். கொதிக்கும் நிலையில் இருந்த தண்ணீரை பாத்ரூமில் ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, வீட்டின் முன்வாசல் கதவை அடைக்கச் சென்றுள்ளார் தாய் சத்யா. அப்போது பாத்ரூமிற்குள் சென்ற குழந்தை ரித்திகா எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதில் குழந்தைக்கு கை, கால் உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாயுடன் வந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை ரித்திகா
குழந்தை ரித்திகாPT Desk

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை ரித்திகா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்திகா இன்று பரிதாபமாக உயிரிழந்ததார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com