சென்னையில் 3 வயது குழந்தை கடத்தல்

சென்னையில் 3 வயது குழந்தை கடத்தல்

சென்னையில் 3 வயது குழந்தை கடத்தல்
Published on

சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் வசிக்கும் இலியாஸ் என்பவரின் 3 வயது ஆண் குழந்தை முகமது சாது, வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை முன்விரோதம் காரணமாக உறவினர்கள் யாரேனும் கடத்தினார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com