அபார நினைவாற்றல்... உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

அபார நினைவாற்றல்... உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை
அபார நினைவாற்றல்... உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை

ஈரோட்டைச் சேர்ந்த 3‌ வயது குழந்தை, அபார நினைவாற்றலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரதீபா - இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் ஒப்புவித்து அசத்தி வருகிறார். இதுகுறித்து அந்த குழந்தையின்‌ வீடியோவை சமூக வலைதளத்தில் கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தை ப்ரிவ்யா-வின் நினைவாற்றலை சோதித்தனர்.

அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா சாய் உலக சாதனை நிகழ்த்தியதை அங்கீகரித்தனர். அதற்‌கான பதக்கத்தையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி குழந்தையை கவுரவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com