அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!

அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!
அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!

அலமாரியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் அடுத்த அகரம் தென் அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் பாலாஜி. இவர்  அலமாரியில் தொலைக்காட்சி பெட்டிக்கு அருகே தனது செல்போனை சார்ஜ் போட்டு வைத்திருந்துள்ளார். அப்போது அவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

செல்போன் ரிங்டோன் சத்தம் கேட்டவுடன் பாலாஜியின் 3 வயது குழந்தை கவியரசு ஓடிச் சென்று செல்போனை எடுக்க முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

சத்தம் கேட்டு ஒடி வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். சேலையூர் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com