\
வாகனத்தின் முன்னால் விளையாடிய குழந்தையை கவனிக்காத டிரைவர்.. பரிதாபமாக உயிரிழப்பு

வாகனத்தின் முன்னால் விளையாடிய குழந்தையை கவனிக்காத டிரைவர்.. பரிதாபமாக உயிரிழப்பு

வாகனத்தின் முன்னால் விளையாடிய குழந்தையை கவனிக்காத டிரைவர்.. பரிதாபமாக உயிரிழப்பு
Published on

விழுப்புரத்தில் காய்கறி விற்கும் மினி வேன் ஏற்றியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் விளந்தை. இக்கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் ருக்குமணி தம்பதியினரின் பெண் குழந்தை போர்ஷிகா (3). இந்த குழந்தை இன்று காலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் காய்கறி விற்பனை செய்யும் மினி சரக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு விற்பனை நடைபெற்ற போது, குழந்தை போர்ஷிகா வாகனத்தின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அறியாமல் விற்பனையை முடிந்த பின்னர் வாகனத்தை ஓட்டுநர் திருமலை (30) இயக்கி உள்ளார். இதனால் வாகனத்தின் முன்னால் இருந்த குழந்தை டயரில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை போர்ஷிகா தலை நசுங்கி உயிரிழந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் திருமலையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com