\
கொரோனா : சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்

கொரோனா : சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்

கொரோனா : சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்
Published on

கொரனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண் உயிரிழந்தார்.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் ஓம்ந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சைப்பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணா தெருவை சேர்ந்த 47 வயது பெண் உயிரிழந்தார்.

மேலும், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com