\
Govt School
Govt Schoolpt desk

கரூர் | பள்ளி சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

கரூரில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் திடீரென மாயமானது அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Published on: 

கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 3 மாணவிகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகளும் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அங்கு, அந்த மாணவிகள் பள்ளி முடிந்து கிளம்பி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Police station
Police stationpt desk

இதையடுத்து பள்ளி அருகில் உள்ள கோயில் ஒன்றில் மூன்று மாணவிகளின் சீருடை அவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பிறந்த நாள் எனக்கூறி சீருடையை அவிழ்த்து வைத்துவிட்டு, மாற்று உடையை அணிந்து கொண்டு கோயிலில் இருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மூன்று மாணவிகளும் எங்கு சென்றனர் என்பது குறித்து தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com