\
ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள் : 3 பேர் மாயம், ஒருவர் பலி

ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள் : 3 பேர் மாயம், ஒருவர் பலி

ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள் : 3 பேர் மாயம், ஒருவர் பலி
Published on

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் ராட்சத அலையில் சிக்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் தனுஷ், ஜெயபாரதி, கோகுல்நாத் ஆகியோர் சக மாணவர் ராகேஷின் பிறந்தநாளை கொண்டாட கே.வி.கே குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கே குளித்து விட்டு மாணவர்கள் நால்வரும் கரையில் இருந்த போது, பெரிய ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் கூச்சலிடுவதைக் கண்டு, அப்பகுதியில் இருந்த மீனவர்கள் கடலில் இறங்கி தேடினர். இருப்பினும் மாணவர்களை மீனவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து தனுஷ் என்ற மாணவனின் உடல் பாறைகளின் இடுக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மாணவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com