கரை ஒதுங்கிய 3 இலங்கை மீனவர்களிடம் விசாரணை

கரை ஒதுங்கிய 3 இலங்கை மீனவர்களிடம் விசாரணை

கரை ஒதுங்கிய 3 இலங்கை மீனவர்களிடம் விசாரணை
Published on

நாகையில் கரை ஒதுங்கிய இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்கள் கள்ளத்தோணியில் வந்தார்களா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

படகு பழுது காரணமாக இலங்கை மீனவர்கள் 3 பேர் நாகை காமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் சோர்வுடன் காணப்பட்ட கடல்கஜன், ஸ்ரீமுருகன், விஜேந்திரன் ஆகிய இந்த மீனவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று பேரிடமும் கீழையூர் கடலோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் ஸ்ரீமுருகன் பாஸ்போர்ட் மோசடி, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தவர். இவரை மீட்டு அழைத்துச்செல்ல கள்ளத்தோணியில் வந்தார்களா? கடத்தல் தொடர்பாக வந்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com