\
சிறையில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம் - 2 வார்டன்கள் நீக்கம்!

சிறையில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம் - 2 வார்டன்கள் நீக்கம்!

சிறையில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம் - 2 வார்டன்கள் நீக்கம்!
Published on

கோவை மத்திய சிறையில் தொடர்ந்து 3 நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்ததால், கவனக்குறைவாக இருந்த சிறை வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சொக்கநாதன் என்பவர் கடந்த மாதம் 30ஆம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அடுத்த நாள், நெல்லை மாவட்டம் நாங்குனேரியை சேர்ந்த உதயக்குமார் என்ற கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 2ஆம் தேதி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர், சிறை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் சிறையில் 3 கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைதிகள் தற்கொலை சம்பவத்தின் போது, பணியிலிருந்த சிறை வார்டன்கள் திருநாவுக்கரசர், பழனிவேலு ஆகிய இருவரும் கவனக்குறைவாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், கடந்த ஜனவரி மாதம் முதல் 9 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com