\
காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்

காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்

காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்
Published on

நாமக்கல் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் 6 பேரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். 

இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை காணவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் சரவணனின் மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தாரகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் அள்ளப்பட்டுள்ளதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

முதலில் குழந்தைகள் நீரில் மூழ்கியதாகவும் அவர்களை காப்பாற்ற சென்றபோதே சரவணனும் ஜோதிமணியும் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com