\
பற்றி எரிந்த வீடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி.. -பெண் உயிரிழப்பு

பற்றி எரிந்த வீடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி.. -பெண் உயிரிழப்பு

பற்றி எரிந்த வீடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி.. -பெண் உயிரிழப்பு
Published on

உசிலம்பட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலைக்கு முயன்றதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவர் சேடபட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் தனது தோட்டத்து வீட்டில் மனைவி செல்லம்மாள் மற்றும் தாய் செல்லம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. வீடு முழுவதுமாக தடைமட்டமாகிய சூழலில் விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் ராமர் உள்ளிட்ட மூன்று பேரும் அரளி விதையை அரைத்து உண்டு தற்கொலை முயற்சி செய்து கண்மாய் காரையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் மூவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தாய் செல்லம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ராமர் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சேடபட்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com