பாம்பு கடித்து 3 மாத கைக்குழந்தை பரிதாப உயிரிழப்பு! வேலூரில் நிகழ்ந்த சோகம்!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே பாம்பு கடித்து 3 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்த குழந்தை
பாம்பு கடித்த குழந்தை PT

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணியப்பன் (23) - செல்வி (21) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், செல்வி ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளைத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார்.

பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு
பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில், இன்று (03.08.2023) காலை குழந்தையை வீட்டில் உள்ள அரையில் தூங்க வைத்து விட்டு வழக்கம்போல் செல்வி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அரைக்கு சென்று பார்த்த போது பாம்பு ஒன்று குழந்தையை கடித்து விட்டு அந்த அரைக்குள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் செல்வி குடும்பத்தினரோடு உடனடியாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.

பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு
பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இது குறித்து வேப்பங்குப்ப காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com