\
காஞ்சிபுரம்: விஷவாயுத் தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: விஷவாயுத் தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: விஷவாயுத் தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு!
Published on

பாதாள சாக்கடையை சுத்தப்படுத்திய போது, விஷவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் சுந்தரமூர்த்தி நகரில் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

இந்நிலையில் அங்குள்ள பாதாளச்சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் காட்ராம்பாக்கம் துப்புரவு பணியாளர்களான முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கியதால் மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி, உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com