தமிழ்நாடு
பணம் கொடுக்காவிடில் 3 கட்சிகளும் டெபாசிட் கூட வாங்க முடியாது: சீமான்
பணம் கொடுக்காவிடில் 3 கட்சிகளும் டெபாசிட் கூட வாங்க முடியாது: சீமான்
ஆர்.கே.நகரில் பணம் கொடுக்காவிடில் 3 கட்சிகளும் டெபாசிட் கூட பெறமாட்டார்கள் என்று சீமான் கூறினார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் இருந்தால், மூன்று கட்சிகளும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய சீமான், கட்சி என்ற பெயரில் சிலர் கம்பெனி நடத்திக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

