தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிய சட்டக்கல்லூரிகள் 2017-18ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்குவதற்காக 3 தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், கல்லூரிகள் தொடங்குவதற்காக ரூ.6.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com