“இன்னும் பதிவு செய்யப்படாத மூன்றரை லட்சம் சிலைகள் கடத்தபட வாய்ப்புள்ளது”- பொன்.மாணிக்கவேல்

“இன்னும் பதிவு செய்யப்படாத மூன்றரை லட்சம் சிலைகள் கடத்தபட வாய்ப்புள்ளது”- பொன்.மாணிக்கவேல்
“இன்னும் பதிவு செய்யப்படாத மூன்றரை லட்சம் சிலைகள் கடத்தபட வாய்ப்புள்ளது”- பொன்.மாணிக்கவேல்

3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து பதிவு செய்யாமல் இருப்பதாகவும், வெளிநாட்டிற்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் தகவல். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி முதல்வருக்கு மனு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஓய்வு பெற்ற பிறகு கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். 6 ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலேயே பணியாற்றினேன். சிலைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக தெரியும். ஓய்வுக்கு பிறகு 290 கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்தேன். தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான கோவில்கள் இருக்கிறது. 

இந்த கோவில்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் சாமி சிலைகள் இருக்கிறது. பஞ்சலோக சிலைகள், தங்கம், வெள்ளி சிலைகள் உள்பட பல்வேறு வகையிலான சிலைகள்  இருக்கிறது. இந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லை. அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவன் தான். இந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. அந்த சிலைகள் தொன்மையா இல்லையா என்பது இதுவரை ஆய்வு செய்து பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. சட்டரீதியாக பதிவு செய்ய முடியால் இருக்கிறது. 40 ஆண்டுகளாக தொன்மை சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது. 

இதனை காரணமாக வைத்து சிலைகள் கடத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் இருப்பதால் தமிழ் கலாச்சாரம் பாதுகாக்க முடியாமல் போகிறது. முன்னோர்கள் நம்மிடம் அதனை கொடுத்து விட்டு சென்றார்கள். ஆனால் நாம் தான் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு கொடுத்துள்ளேன். மனுவாகவும் வீடியோவில் பேசியும் மனு கொடுத்துள்ளேன். நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக நல்ல பெயரை இந்த எடுக்க வேண்டுமென்றால் இந்த சிலைகள், கல்வெட்டுகளை பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காப்பற்ற வேண்டும். இதனை பதிவு செய்து விட்டால் வரலாற்றில் இல்லாத நல்ல பெயர் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கிடைத்து விடும். 

என்னுடைய ஆலோசனை கேட்கனும் அவசியமில்லை. நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரமான தொன்மையான சிலைகளை பாதுகாக்க ஒரே வழி இது தான். ஆயிரம் ஆண்டுகள் நிம்மதியாக இருக்கலாம். சென்னையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு தெய்வ சிலைகள் காட்சிப்பொருளாக வைத்து பணம் சம்பாதித்து வருவது எவ்வளவு அவலமான செயல். 2500 சிலைகள் காட்சி பொருளாக வைத்திருப்பது அநியாயமான செயல். 

நான் தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளேன். அரசு செய்யும் என நம்புகிறேன். நம்பிக்கை இருக்கிறது. 40 ஆண்டுகளாக குறைந்தது 10 சிலைகளுக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது இருந்த உள்துறை செயலாளர்,  டிஜிபி, மற்றும் அரசு அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தவில்லை. பாதுகாப்பு அறை கட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தடை உத்தரவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். 

நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த போது சிலைகடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் வெளியே வர முடியாது. கடுமையான வழக்குகளை போட்டுள்ளோம். உரிய ஆதாரங்கள் இருக்கிறது. நான் பணியில் இருந்த போது 6 மாதத்தில் 5,090 சிலைகள் தொன்மையயானவை என கண்டறிந்துள்ளோம். அதில் 197 சிலைகள் தொன்மை இல்லாதவை, போலியானது என கூறிவிட்டோம். ராஜராஜசோழனின் சிலையை அங்கு வைக்க அனுமதிக்காதபோது 197 போலியான சிலைகள் எப்படி கோவில்களுக்குள் சென்றது? 

சமீபத்தில் மரகதலிங்கம் மீட்கப்பட்டுள்ளது. அதற்கு பாராட்டுகிறேன். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள கூடுதல் எஸ்பிக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொன்மையை ஆய்வு செய்ய அதிகாரிகள் பற்றாகுறை இருப்பதாக சொல்ல முடியாது. ஆட்சியாளர்கள் அதிகாரிகளை தள்ளி வைத்து கொள்ள வேண்டும். பக்கத்தில் வைக்க கூடாது. இந்து சமய அறநிலைத்துறையில் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். 1972-ம் ஆண்டில் இருந்து அவர்களது சட்ட கடமையை செய்ய தவறி விட்டார்கள். அமெரிக்காவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிலைகள் வர உள்ளதாக தெரிகிறது. 516 சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். 

சிலைகளை பாதுகாக்க மனு கொடுத்துள்ளேன். என்னுடைய தலைமையில் குழு அமைக்க வேண்டும் என அரசு அவசியமில்லை. நான் தொண்டு செய்யவே உள்ளேன். ஊடகங்களே நிறைய பெயரை பெற்று கொடுத்து விட்டீர்கள் அதுவே போதும். அரசு குழுவில் இருக்க மாட்டேன். உதவி செய்வேன். வெளிநாட்டில் இருந்து வரும் 1972 தஞ்சாவூரில் புன்னை நல்ல மாரியம்மன் கோவில் இருக்கிறது. அதன் அருகில் கைலாசநாதர் கோவில் இருக்கிறது. அங்குள்ள நடராஜன் சிலைகள் உள்பட சில சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது. 

சாமி சிலைகள் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை படம் எடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் சிலைகள் கடத்தப்பட்டது.  அந்த 4  சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டது. இதில் கோவில் நிர்வாகிகள், இந்து சமய நிலைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கடத்தப்பட வாய்ப்பு இல்லை. அந்த சிலைகள் இந்தியாவிற்கு வர உள்ளது" என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com