இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்

இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்

இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்
Published on

ராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை அடுத்த திருப்பாலைக்குடி அருகே நாகனேந்தல் விலக்கு பகுதியில் உப்பூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை முடிந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த இருச்சக்கர வாகனம் எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com